2652 சுகாதார உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள், மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு எதிர்வரும் மாதம் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நாட்டின் சுகாதார சேவைக்கு மேலும் 2,652 பேர்
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் பணிப்புரைக்கு அமைவாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு இலங்கையின் இலவச சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலையை வினைத்திறனாக்கும் வகையில், வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சேவைகளை சீர்குலைக்காமல் பேணுவதற்கும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன்படி, மனித வள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், நீண்ட காலத்துக்குப் பின்னர், சுகாதார பணி உதவியாளர் (SKS) உட்பட பல துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து, மேல் மாகாணத்தில் சுகாதார பணி உதவியாளர் (SKS) முதல் தொகுதி 627 பேருக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் அவர்களினால் (Tower Hall) டவர் ஹாலில் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, பல்வேறு தொழில் பிரிவுகளின் கீழ் சுகாதார உதவியாளர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட முறைப்படுத்தப்பட்ட நேர்காணல்களை வெற்றிகரமாக முடித்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி, ஜூலை 04-ஆம் தேதி முதல் குழுவாக 627 சுகாதார சேவை உதவியாளர்கள் (SKS), இரண்டாவது குழுவாக 600 சுகாதார சேவை உதவியாளர்கள் (SKS), ஆகஸ்ட் 01-ஆம் தேதி 3-ஆவது குழுவாக 762 சுகாதார சேவை உதவியாளர்கள் (SKS), அத்துடன் 295 நூளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் 121 மேல் நிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஜூலை 16 ஆம் திகதி 247 அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கும் மேலதிகமாக நியமனங்களை வழங்குவதற்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் இந்த மனிதவள மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை, சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களும் நீண்டகாலமாக கோரிவரும் மனித வளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய இந்த நியமனங்களை வெளிப்படைத்தன்மைகளுடன் வழங்குவது இங்கு விசேடமான விடயமாகும்


