இலங்கை மெட்ரோ போக்குவரத்து திட்டத்திற்காக (Urban Luxury Transport) கொள்வனவு செய்யப்பட்ட 104 பேருந்துகள் இலங்கையை வந்தடைந்தன.
இந்தப் பேருந்துகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் கொழும்பு நகர்ப்புற பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் இந்த குறைந்த தரைப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக நவீன மற்றும் வசதியான, மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட பேருந்துகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் (Urban Luxury Transport) கீழ் இந்தப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


