சிங்கத்தின் முகத்தை ஒத்த தோற்றத்தைக் கொண்ட NGC 2392 எனப்படும் ‘சிங்க நெபுலா’வின் புதிய பிரமிக்க வைக்கும் படத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பதிவு செய்துள்ளது.
இது நடுத்தர நிறை கொண்ட நட்சத்திரங்கள் தமது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் வெளியேற்றும் அயனியாக்கப்பட்ட வாயு மற்றும் தூசிகளால் உருவாகும் கோள் நெபுலா வகையைச் சேர்ந்ததாகும்.
நட்சத்திரம் தனது வெளிப்புற அடுக்குகளை உதிர்த்த பின்னர், அதன் மையத்தில் எஞ்சியுள்ள வெண் குறுங்கோள் சுற்றியுள்ள பொருட்களை வெப்பப்படுத்துவதால், சிங்கத்தின் முகத்தை ஒத்த வாயுக் குமிழி உருவாகியுள்ளதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2000ஆம் ஆண்டு ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியும் NGC 2392-ஐ ஆய்வு செய்திருந்த நிலையில், தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி NIRCam மற்றும் MIRI கருவிகளைப் பயன்படுத்தி அதன் மிகவும் தெளிவான புதிய தோற்றத்தைப் பதிவு செய்துள்ளது.


