Monday, March 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வளமான கொட்டகலையை உருவாக்குவோம்- 2000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

வளமான கொட்டகலையை உருவாக்குவோம்- 2000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கல்விக்கு கரம் கொடுக்கும் செயற்திட்டத்தின் கீழ் வளமான கொட்டகலையை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் கொட்டகலை பிரதேசத்திற்குட்பட்ட 2000 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் இரண்டாம் கட்டமாக 500 மாணவர்களுக்கு கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் தலைமையில் கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தான பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

தலவாக்கலை, லிந்துலை நகரசபை முன்னாள் தலைவர் அசோக சேபால, கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களான ரவீந்திரன், கண்ணதாசன். ரசிகா பீரிஸ் ஆகியோரும் இரண்டாவது கட்டமாக நடைபெற்ற இந் நிகழ்வில் ஹறிங்டன் தமிழ் வித்தியாலயம், ஸ்ரீ பெரகும் சிங்கள வித்தியாலயம், மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் ரொசிட்டா, ஊட்டன் தோட்டங்களை சேர்ந்த 500 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் உதவிக்கரம் நீட்டிய பிரபல வர்த்தகர் பாண்டிதேவர் தினேஸ்காந்த் மற்றும் மலையக உணர்ச்சி பாடல்களை இயற்றி மலையக சமூகத்தை விழிப்புற செய்யும் தனித்துவ சொல்லிசைப் பாடகர் யோகி ஶ்ரீ, கல்வி பணிப்பாளராக உயர்வு பெற்ற விக்னேஸ்வரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கொட்டகலை கிராம சேவை அதிகாரி கிருஸ்னராஜ், ஹறிங்டன் தமிழ் வித்தியாலய அதிபர், முன்னாள் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை முதல்வர், தேவஸ்தான தலைவர். போசகர். உபதலைவர், ஆசிரியர் விஜயகுமார், ரஜனி,. தியாகராஜா, திருமதி சித்ரா, கமலா பூலிங்கம், பிரபா, மோகனசந்திரன், ராகம் இசைக்குழுவின் சிவகுமார், சரவணா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments