Thursday, November 21, 2024
spot_img
Homeஉலக செய்திகள்ரஸ்யாவிற்குள் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு உக்ரைனிற்கு பைடன் அனுமதி

ரஸ்யாவிற்குள் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு உக்ரைனிற்கு பைடன் அனுமதி

ரஸ்யாவிற்குள் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு உக்ரைனிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அனுமதி வழங்கியுள்ளார்.

அமெரிக்கா வழங்கியுள்ள ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொள்வதற்கு பைடன் அனுமதிவழங்கியுள்ளார்.

கடந்தபல மாதங்களாக உக்ரைன் ஜனாதிபதி ஏடிசிஏம்எஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஸ்யாமீது தாக்குதல்களை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவந்த நிலையிலேயே பைடன் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

ரஸ்யாவின் கேர்க்ஸ் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் படையினரின் தற்பாதுகாப்பை கருத்தில் கொண்டே ஏடிசிஏம்எஸ் ஏவுகணைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ரஸ்யா மீது பயன்படுத்துவதற்கு அமெரிக்கா அனுமதிவழங்கியுள்ளது.

ரஸ்யாவிற்குள் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் கேர்க்ஸ் பிராந்தியத்தின் சிறிய பிராந்தியத்தை உக்ரைன் தொடர்ந்தும் கைப்பற்றி வைத்திருப்பதற்கான முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments