வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் ஒன்று யாழில் களவு போய் உள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த 11/1/2026 கட்டைக்காட்டை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு அவசர தேவை நிமிர்த்தம் BHU 3878 இலக்கமுடைய pulser ரக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்
யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியின் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பொருட்களை அருகில் உள்ள கடையில் கொள்வனவு செய்துள்ளார்
ஒரு சில நிமிடங்களின் பின்பு திரும்பி வந்து மோட்டார் சைக்கிளை பார்த்த போது குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிள் இருக்கவில்லை
மோட்டார் சைக்கிள் களவு போனதை அறிந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தரால் முறைப்பாடளிக்கப்பட்டது
அதன் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



