மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த திருட்டு சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பெத்தகானை பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 99 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.