Thursday, November 21, 2024
spot_img
Homeகனடா செய்திகள்பிரதமர் ட்ரூடோ பதவி விலகினால் அப்பதவியை பொறுப்பேற்று நாட்டை வழிநடத்த தயார்! முன்னாள் முதல்வர்

பிரதமர் ட்ரூடோ பதவி விலகினால் அப்பதவியை பொறுப்பேற்று நாட்டை வழிநடத்த தயார்! முன்னாள் முதல்வர்

அண்மைக் காலமாக பிரதமர் ட்ரூடோவிற்கு எதிராக மக்கள் மத்தியிலும் கட்சிக்கு உள்ளேயும் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு பின்னணியில் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண முன்னாள் முதல்வர் கிறிஸ்டி க்ளாக் தெரிவித்துள்ளார்.

கனடிய பிரதமர் பதவி விலகினால் அந்தப் பதவியை பொறுப்பேற்று நாட்டை வழிநடத்த தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

58 வயதான கிளார்க் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண முதல்வராக கடமையாற்றியுள்ளார்.

லிபரல் கட்சி மற்றும் நாடு என்பனவற்றின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் நாட்டை வழிநடத்தவும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கி வரும் கடுமையான சவால்களுக்கு நடைமுறை ரீதியான தீர்வு திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments