Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பல இடங்களில் மழைக்கான சாத்தியம்!

பல இடங்களில் மழைக்கான சாத்தியம்!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும், காற்றின் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. வரை இருக்கும்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் (50-55) கி.மீ. வரை அதிகரிக்கும்.

சிலாபத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கும்.

கடல் நிலை:

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகக் காணப்படும்.

சிலாபத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகக் காணப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments