Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பல அரச பேருந்து சேவைகள் இல்லை- மக்கள் பெரும் அவதி!

பல அரச பேருந்து சேவைகள் இல்லை- மக்கள் பெரும் அவதி!

ஹட்டன் அரச பேருந்து நிலையம் நடாத்தும் மஸ்கெலியா கொழும்பு, மஸ்கெலியா மறே, மஸ்கெலியா ஹட்டன், போன்ற அரச பேருந்து சேவைகள் கடந்த சில நாட்களாக இல்லாமை காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் அரச ஊழியர்கள் பெரிதும் சிரமத்தை எதிர் நோக்குகின்றனர்.

குறிப்பாக மாதாந்த பயனசீட்டை முன் கூட்டியே பணம் கொடுத்து வாங்கிய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனியார் பேருந்துகளில் மீண்டும் பணம் கொடுத்து செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.

அவ்வாறு பணம் கொடுத்து சென்றாலும் குறித்த நேரத்திற்கு கடமைக்கு செல்ல முடியாது உள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அடிக்கடி பேருந்துகள் பழுது அடைந்து வருகிறது நடத்துநர் மற்றும் சாரதிகள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது புதியவர்கள் இணைத்து கொள்ளவும் புதிய பேருந்துகள் வழங்க இன்றைய அரசு முன்வர வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி தலவாக்கலை நகர சபைக்கு உட்பட்ட பகுதி ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட பகுதி நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு எமது அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்கள் நோயாளிகள் அரச உத்தியோகத்தர்கள் பயணிகளுக்கு எமது அரச பேருந்து சேவைகள் இடம் பெற்று வருகின்றன அத்துடன் கொழும்பு கண்டி கதிர்காமம் போன்ற தூர சேவைகள் பல இடம் பெற்று வருகின்றன அத்துடன் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்ரீகர்கள் நலன் கருதி விசேட சேவைகள் இடம் பெற்று வருகின்றன இக் காலத்தில் ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்குறையை உடன் நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments