அனைத்து இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்களுக்கும் இன்று முதல் திங்கட்கிழமை (18) வரை தற்போதுள்ள பஸ்களை சேவையில் ஈடுப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில், தற்போதைய நேர அட்டவணையின்படி பஸ்களை இயக்குமாறு அனைத்து மாகாண டிப்போக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு பிராந்தியங்களில் இன்று மேலதிகமாக 70 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேலும் 80 பஸ்கள் நாளை கொழும்பு கோட்டைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பஸ்கள் தற்போதுள்ள கால அட்டவணைக்கு மேலதிகமாக சேவையில் ஈடுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.