சீனாவின் வூக்ஸி நகரில் 21 வயது இளைஞா் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா். 43 போ் காயமடைந்தனா்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வூக்ஸி நகரில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் 21 வயது இளைஞா் கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.
இந்த கோர தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் ஆயுதம் வைத்திருப்பதற்குஅனுமதியில்லாத அந்த நாட்டில் இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. சொந்த பிரச்சினைகள் காரணமாக சமுதாயத்தைப் பழி தீா்க்க இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஷுஹாய் நகரில் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற, கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நபா் காரை மோதச் செய்து நடத்திய தாக்குதலில் 35 போ் உயிரிழந்த சில நாள்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.