பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, இறைச்சியாக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உயிருள்ள இரண்டு மாடுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் பண்டாரகம, அடலுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.