Thursday, November 21, 2024
spot_img
Homeகனடா செய்திகள்கனடிய மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் இந்திய குற்ற கும்பல்

கனடிய மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் இந்திய குற்ற கும்பல்

கனடிய வாழ் மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் இந்திய குற்ற கும்பல் தொடர்பில் மீண்டும் சர்ச்சை கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கனடாவில் வாழ்ந்து வரும் தென் ஆசிய புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்து இந்த கும்பல் செயல்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் ரிச்மண்ட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காஷ் ஹீட் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

லாரன்ஸ் பிஷோனி தலைமையிலான குற்றக் கும்பல் ஆண்டுகளாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கும்பல் கனடிய மண்ணில் பல்வேறு வன்முறை குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். லோரன்ஸ் பிஷோனி தலைமையிலான கும்பலின் செயற்பாடுகள் குறித்து புலம்பெயர் சமூகம் நன்கு அறிந்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்திப் சிங் நிஜார் படுகொலை சம்பவத்தின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலை உக்கிரமடைந்துள்ளது.

இரு நாடுகளும் ராஜதந்திரிகளை நாடு கடத்தி இருந்தன. இவ்வாறான ஒரு பின்னணியில் குறித்த குற்ற கும்பல் தொடர்பில் இவ்வாறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments