Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழப்பு!

இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழப்பு!

இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

Libercourt (Pas-de-Calais) நகரில் இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. 15 வயதுடைய நால்வர் கொண்ட குழு ஒன்று கார் ஒன்றில் Boulevard Ferdinand-Darchicourt பகுதியில் பயணித்துள்ளனர். அவர்களது காரோடு மற்றொரு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இரண்டாவது காரில் பயணித்த 39 வயதுடைய சாரதி மற்றும் இரு சிறுவர்கள் என மொத்தம் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கோர விபத்தை அடுத்து காலை 6 மணிவரை போக்குவரத்து தடைப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments