வத்தளை – மாபோலை பகுதியில் 18 கிலோகிராமிற்கும் அதிகமான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 9 கிலோகிராம் 229 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 9 கிலோகிராம் 264 கிராம் ஹெரோயின், போதைப்பொருட்களை எடைபோடப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் தராசு மற்றும் கைபேசி ஆகியவற்றைக் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


