Thursday, July 2, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வடக்கின் சுகாதார அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

வடக்கின் சுகாதார அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் சுகாதார அபிவிருத்திக்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தினார்.

வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவையில் ஒரு புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தவும், எதிர்காலத்தில் அதை மேலும் அதிக செயல்திறன் மிக்கதாக மாற்றுவது குறித்து கலந்துரையாடப்பட்டன.

வட மாகாண மக்களுக்குத் சிறந்த மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த சுகாதார சேவைகளை வழங்கும் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோர் முன்னிலையில் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அண்மையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், வடமாகாணத்தில் உள்ள போதனா வைத்தியசாலை, மாவட்ட பொது வைத்தியசாலைகள், அடிப்படை வைத்தியசாலைகள், பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதிர்நோக்கும் தற்போதைய சவால்கள் குறித்தும் மக்களுக்கு வினைத்திறனான சுகாதார சேவையை வழங்குவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதுடன் விசேட வைத்தியர்கள், பொது வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறையை குறைத்து ஆரம்ப சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வடமாகாணத்தின் தீவுப் பகுதிகள் உட்பட தொலைதூர பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு சுகாதார சேவைகளை இலகுவாக கிடைக்ககூடிய வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மற்றும் சிகிச்சைக்காக எடுக்கும் நேரத்தைக் குறைத்தல் ஆகியவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வட மாகாணத்தில் ஒரு போதனா வைத்தியசாலை, 04 மாவட்ட பொது வைத்தியசாலைகள், 10 அடிப்படை வைத்தியசாலைகள், 55 மாவட்ட வைத்தியசாலைகள், 48 பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் 33 வைத்திய அதிகாரி அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜசிங்க, மேலதிக செயலாளர் சலிந்த பண்டார, பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ். ஸ்ரீதரன், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்.சமன் பத்திரான, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டி. சத்யமூர்த்தி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனிய மாவட்ட பொது மருத்துவமனைகளின் பணிப்பாளர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனிய மாவட்ட சுகாதார சேவைகளின் பணிப்பாளர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பல சுகாதார அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments