இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பொது மேடையில் கேலி செய்ததாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பொது மேடைகளில் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக விமர்சித்துள்ள அவர், இதனை அரசியல் விரக்தியின் வெளிப்பாடாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தி தனது “நாடக அரசியலை” கைவிட்டு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கண்ணியத்தை கருத்திற்கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, ராகுல் காந்தியின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பல்வேறு விமர்சனங்களையும் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


