Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மிதிகமவில் துப்பாக்கிச் சூடு!

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு!

மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மிதிகம, யாகுவத்த, கங்கொட பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு 11.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது தீ வைக்கவும் அவர்கள் முயற்சித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், வீட்டிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ‘மிதிகம லங்சி’ என்பவர் வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments