Thursday, October 15, 2026
spot_img
Homeகனடா செய்திகள்மார்க் கார்னி - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட உரையாடல்

மார்க் கார்னி – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட உரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையில் விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைவதற்காக, விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைவில் நிறைவு செய்ய இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த உரையாடல் தொடர்பில் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மார்க் கார்னியுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதுடன், வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்களிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட துறைகளில் நடைமுறை முன்னேற்றங்களை ஏற்படுத்த இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஓராண்டில் நிதி, பாதுகாப்பு, மக்களிடையிலான உறவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு பிரதமர்களும் பாராட்டுத் தெரிவித்ததாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் தலைவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments