Tuesday, July 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்பிரேசிலை அதிரடியாக வீழ்த்தி காலிறுதி காலிறுதிக்குள் நோர்வே

பிரேசிலை அதிரடியாக வீழ்த்தி காலிறுதி காலிறுதிக்குள் நோர்வே

உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடரின் இன்று அதிகாலை நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ (Round of 16) தகுதிச் சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நியூயோர்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறவில்லை.

போட்டியின் 79-வது நிமிடத்தில் நோர்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலன்ட் (Erling Haaland) முதல் கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் அவர் அடித்த மற்றொரு கோல் நோர்வேயின் வெற்றியை உறுதி செய்தது.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+10′ நிமிடத்தில்) பிரேசில் அணியின் நெய்மார் (Neymar) பெனால்டி வாய்ப்பின் மூலம் ஒரு கோல் அடித்தார். எனினும், அதற்குள் ஆட்ட நேரம் முடிந்ததால் பிரேசில் அணி உலகக் கிண்ணத் தொடரிலிருந்து  வெளியேறியது.

இந்த வெற்றியின் மூலம் நோர்வே அணி முதன்முறையாக உலகக் கிண்ணத்தின் காலிறுதிப் போட்டிக்கு (Quarter-finals) தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments