Friday, October 16, 2026
spot_img
Homeகனடா செய்திகள்பிரம்ரன் மேயராக மீண்டும் தெரிவு செய்யப்பெறுவார் பெற்றிக் பிரவுண்!

பிரம்ரன் மேயராக மீண்டும் தெரிவு செய்யப்பெறுவார் பெற்றிக் பிரவுண்!

பிரம்ரன் மேயராக மீண்டும் தெரிவு செய்யப்பெறுவார் என்ற நம்பிக்கையோடு பெற்றிக் பிரவுண் அவர்களை வாழ்த்துவதற்காக பிரம்ரன் ஶ்ரீ சபரி பீடத்தில் கூடிய அடியார்கள்.

மக்கள் ஆதரவோடு Barrie தொகுதியின் கனடிய பாராளுமன்ற உறுப்பினராக நீண்ட காலம் பதவி வகித்த ‘தமிழ் மக்களின் நண்பன்’ என்று அன்பாக நேசிக்கப்பெறும் பெற்றிக் பிரவுண் அவர்கள் பிரம்ரன் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பெற்ற நாள் தொடக்கம் பிரம்ரன் நகர மக்களுக்கும் அதேபோன்று தமிழ் மக்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை பல வழிகளில் நிரூபித்து வருகின்றார்.

அவ்வாறாக மக்கள் ஆதரவோடு மீண்டும் தெரிவு செய்யப்பெறுவார் என்ற நம்பிக்கையோடு தற்போதைய மேயராக விளங்கும் பெற்றிக் பிரவுண் அவர்களை வாழ்த்துவதற்காக ‘பிரம்ரன் ஶ்ரீ சபரி பீடத்தில்’ கடந்த 11ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கூடிய ஐயப்பன் அடியார்கள் பீடத்தின் தர்மகர்த்தா அருண் கணேசன் குருசாமி அவர்கள் தலைமையில் அங்கு வருகை தந்த பெற்றிக் பிரவுண்’ அவர்களை வரவேற்றார்கள்.

அதன் பின்னர் நடைபெற்ற விசேட பூசை மற்றும் அபிஷேகங்களிலும் அவர் பங்கெடுத்தார். அத்துடன் அங்கு கூடியிருந்த ஐயப்ப பக்தர்கள் மத்தியில் உரையாற்றிய போது கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு என்னால் எவ்வளவு சேவையாற்றக் கூடியதாக இருந்ததோ, அந்தளவிற்கும் அதிகமாக இனிவரும் காலங்களில் சேவையாற்றக் காத்திருக்கின்றேன் என்று தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய குருசாமி அருண் கணேசன் அவர்களின் துணைவியார் மற்றும் புதல்வி ஆகியோர் முறையே ஆங்கிலத்திலும் பிரன்ச் மொழியிலும் தங்கள் ஆதரவு தரும் வார்த்தைகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

மீண்டும் பிரம்ரன் மாநகரின் மன்னராக எமது பெற்றிக் பிரவுண் அவர்கள் தெரிவு செய்யப்பெறும் நாளுக்காக காத்திருந்து அன்றைய தினம் நடைபெறவுள்ள ‘வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வோம்; என்ற நம்பிக்கையுடன் Roobam media சார்பாக அதன் பொறுப்பாளர் ராம் சங்கர் பெரும் ஆராதவையும் தந்து வாழ்த்துக்களையும் மிக்க மகிழ்வுடன் தெரிவித்து கொள்ளுகின்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments