Saturday, October 24, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்பிரபாஸின் ‘ஃபௌசி’ திரைப்படத்தின் வெளியீடு திகதி அறிவிப்பு

பிரபாஸின் ‘ஃபௌசி’ திரைப்படத்தின் வெளியீடு திகதி அறிவிப்பு

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஃபௌசி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதுடன், படத்தின் அறிமுகக் காணொளியும் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் அதிரடித் திரைப்படமாக உருவாகும் ‘ஃபௌசி’, முன்னதாக டிசம்பர் 3ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இத்திரைப்படத்தை நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். பான் இந்தியத் திரைப்படமாக உருவாகும் ‘ஃபௌசி’, உலகளாவிய ரீதியிலும் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி நடித்துள்ளதுடன், அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments