Monday, September 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தெற்கு அதிவேக வீதியில் சொகுசு கார் விபத்து

தெற்கு அதிவேக வீதியில் சொகுசு கார் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காரொன்று இன்று (07) காலை வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தொடங்கொட 32.4 கிலோமீட்டர் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று மீண்டும் மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே, பராமரிப்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த வீதித் தடுப்புகளில் மோதி, தொடர்ந்து முன்னோக்கிச் சென்று வீதியின் நடுவிலிருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையின் நடுவிலுள்ள பாதுகாப்பு வேலிக்கும் வீதித் தடுப்புகளுக்கும் மற்றும் காரிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments