கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தம்பி உயிரிழந்த செய்தியைக் கேட்டு, விஷக் கிழங்கு வகையொன்றை உட்கொண்ட அண்ணனும் உயிரிழந்த சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது.
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிவடுன்ன, ஹல்பிட்டிய முகவரியில் வசித்து வந்த 39 வயதுடைய பிரசன்ன தர்மரத்ன மற்றும் 43 வயதுடைய ஜயந்த குமார ஆகிய சகோதரர்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 39 வயதுடைய தம்பி திருமணமானவர் என்பதுடன், அவருக்கு 04 வயதுடைய மகன் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரை விட்ட அண்ணன்
மகனுக்கு 10 மாதங்களாக இருக்கும் போது, மனைவி கணவரை கைவிட்டு சென்றுள்ளார். தனது தாய் மற்றும் தங்கையிடம் குழந்தையை பராமரிக்க ஒப்படைத்திருந்த ஒரு பிள்ளையின் தந்தையான அவர், தனிமையில் வசித்து வந்துள்ளார்.
உயிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தைக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் மூவரும் கடந்த 07 ஆம் திகதி மாலை 39 வயதுடைய தம்பியின் வீட்டில் மது அருந்தியுள்ளதாகவும், மது அருந்தி முடிந்ததும் மூத்த சகோதரர்கள் இருவரும் தம்பியின் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
தம்பியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் தாய் வந்து பார்த்தபோது, தம்பி வீட்டின் வாசலில் சுயநினைவின்றி, தலையில் இரத்தம் வடிந்த நிலையில் விழுந்து கிடப்பதைக் கண்டு, மூத்த சகோதரர்கள் இருவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தசெய்தியைக் கேட்டு மனவேதனையடைந்த இரண்டாவது சகோதரர், கிழங்கு வகையொன்றை உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.
சகோதரர்கள் இருவரதும் இறுதிக்கிரியைகள் நேற்று மாலை கேகாலை, ஹிரிவடுன்ன, ஹல்பிட்டிய பகுதியில் அவர்கள் வசித்து வந்த மா ஓயா ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காணியில் இடம்பெற்றன.


