ரொறன்ரோவின் மையப்பகுதியில் அமைந்துள்ள உயரமான கட்டடம் ஒன்றின் கூரை பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணியளவில் பிரெம்னர் சாலை மற்றும் லோயர் சிம்கோ தெரு பகுதிக்கு அருகிலுள்ள கட்டடம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதிக்குள் நுழைந்த இந்த நபர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காக புகைப்படங்கள் எடுக்க முற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களை தடுக்க முயன்ற பாதுகாப்பு காவலர் மற்றும் கட்டட மேலாளர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்றனர்.
விரைந்து செயல்பட்ட காவல் அதிகாரிகள், அந்த இடத்திற்கு அருகிலேயே வைத்து நான்கு பேரையும் கைது செய்தனர்.
நியூமார்க்கெட்டைச் சேர்ந்த அமீர்சலார் லோடிஃபியோஃப், ரொறன்ரோவைச் சேர்ந்த அலெஜான்ட்ரோ கோன்சாலஸ், வெல்லண்டைச் சேர்ந்த லியாம் ஷானன் மற்றும் செயிண்ட் கேத்தரިஸைச் சேர்ந்த ஜேன் அர்ச்சம்பால்ட் ஆகியோர் மீது அத்துமீறி நுழைதல், தாக்குதல் நடத்துதல், கைது நடவடிக்கையை எதிர்த்தல் மற்றும் திருட்டுக் கருவிகள் வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதில் அர்ச்சம்பால்ட் மீது நன்னடத்தை விதியை மீறிய கூடுதல் குற்றச்சாட்டும் பதியப்பட்டுள்ளது.
மேலும் நகரின் பிற திருட்டுச் சம்பவங்களிலும் இவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


