Wednesday, October 21, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற அமித் மிஸ்ரா, தற்போது பயிற்சியாளர் பொறுப்பில் தனது புதிய பயணத்தை ஆரம்பிக்கிறார்.

43 வயதான அமித் மிஸ்ரா, ஐபிஎல் தொடரில்டெல்லி கேப்பிடல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

162 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், மொத்தம் 174 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அத்துடன், ஐ.பி.எல் வரலாற்றில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையையும் அமித் மிஸ்ரா படைத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments