Wednesday, October 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஞானசார தேரருக்கு ஆதரவான பிக்குகளின் பாதயாத்திரை ஐந்தாம் நாளாக ஆரம்பம்!

ஞானசார தேரருக்கு ஆதரவான பிக்குகளின் பாதயாத்திரை ஐந்தாம் நாளாக ஆரம்பம்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கும், பிக்குகளின் சமய உரிமைகளுக்கும் ஆதரவாக மகாசங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை, ஐந்தாம் நாளாக இன்று (13) நிட்டம்புவ நகரிலிருந்து ஆரம்பமானது.

‘துறவிக்கான நீதி – தேசிய உறுதிப்பாடு மற்றும் சுதந்திரப் பாதயாத்திரை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாதயாத்திரை, கண்டியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

முதலாம் நாளில் கடுகண்ணாவை நோக்கிச் சென்ற பாதயாத்திரை, இரண்டாம் நாளில் கடுகன்னாவையிலிருந்து கேகாலை நோக்கி முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 12ஆம் திகதி கேகாலையிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை வரக்காபொல நகரைச் சென்றடைந்தது.

நான்காம் நாளில் வரக்காபொலையிலிருந்து நிட்டம்புவ நோக்கி முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை, இன்று நிட்டம்புவயிலிருந்து கடவத்தை நகரை நோக்கித் தொடர்கிறது.

இந்தப் பாதயாத்திரை நிட்டம்புவை மற்றும் கடவத்தை நகரங்கள் ஊடாகப் பயணித்து, நாளை (15) கொழும்பைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments