Sunday, October 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஞானசார தேரருக்காக இரண்டாம் நாளாகவும் தொடரும் நடைபயணம்

ஞானசார தேரருக்காக இரண்டாம் நாளாகவும் தொடரும் நடைபயணம்

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலை மற்றும் பௌத்த பிக்குகளின் மத உரிமைகளை வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் முன்னிலையில் தொடங்கப்பட்ட நடைபயணம் இன்று (11) இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகிறது.

இந்த நடைப் பயணம் நேற்று (10) காலை கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமானது.

நேற்றைய தினத்தின் முதல் கட்டப் பயணம் கடுகன்னாவ பகுதியில் நிறைவடைந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கடுகன்னாவவிலிருந்து நடைபயணம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நடைபயணத்தை மேற்கொள்பவர்கள் கடுகன்னாவ, கேகாலை, வரக்காபொல நிட்டம்புவ மற்றும் க​டவத்தை உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கடந்து, எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பைச் சென்றடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments