Monday, September 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சில மாகாணங்களுக்கு பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

சில மாகாணங்களுக்கு பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும்.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதேவேளை சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஒகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு அண்மையிலுள்ள அட்சரேகைகளுக்கு நேரே உச்சம் கொடுக்கின்றது.

இன்றைய தினம் (07) நண்பகல் 12:08 மணிக்கு காலி, அங்குலுகஹ, இமதுவ, தெலிஜ்ஜவில, யடியன மற்றும் தங்காலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments