சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 336 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பணியாளர் குடியிருப்பு வளாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நாளை (19) காலை சாவகச்சேரி ஆரம்ப வைத்தியசாலையில் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
வடமாகாண மக்களுக்கு வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த இரண்டு திட்டங்களும் மாகாண சபையின் நோக்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய மருந்தகத்துடன் கூடிய குடியிருப்பு வளாக த்திற்காக ஒதுக்கப்பட் ட நிதி 282.52 மில்லியன் ரூபாவாகும். கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் 2027 இல் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் லிஃப்ட் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டமும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கபட்டு உள்ளதுடன், அதற்காக செலவிடப்படும் தொகை 53 மில்லியன் ரூபாவாகும்.
வடமாகாண சபையின் விதிகளின் கீழ் அந்த ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டம் 2027 ஆம் ஆண்டு மே மாதம் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் பிரதேச அரசியல் பிரதிநிதிகள்,மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


