Tuesday, November 10, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கியூபெக்கில் அதிகரிக்கும் இன்ஃப்ளுவென்சா காய்ச்சல்

கியூபெக்கில் அதிகரிக்கும் இன்ஃப்ளுவென்சா காய்ச்சல்

கியூபெக் மாகாணத்தில் இந்த ஆண்டு இன்ஃப்ளுவென்சா (influenza) எனப்படும் காய்ச்சல் பரவல் ஆனது, வழக்கத்தை விட முன்கூட்டியே தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், கியூபெக் மாகாண மக்கள் அனைவரும் இலவசமாக காய்ச்சல் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பிற மாகாணங்களில் அனைவருக்கும் தடுப்பூசிச்சேவை இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், கியூபெக் மட்டுமே இதற்கு விதிவிலக்காக மாறியுள்ளமை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தொற்றுநோய் பரவலின் போது பொதுமக்களுக்கு முன்னர் இலவசமாக வழங்கப்பட்ட காய்ச்சல் தடுப்பூசிகள், தற்போது தொற்றுக்கு முந்தைய பழைய முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குறிப்பிட்ட ஆபத்தான பிரிவினரைத் தவிர மற்ற சாதாரண வயதுடையவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் $30 முதல் $60 டொலர் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இத்தகைய கட்டண முறையால், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது தடுக்கப்படும் எனவும் சுகாதார சமத்துவமின்மை கியூபெக்கில் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments