சீனாவில் இருந்து கைப்பற்றப்பட்ட அங்கீகரிக்கப்படாத ‘பெப்டைட்’ மருந்துகளில் ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவற்றை உட்கொள்ளவோ அல்லது ஊசி மூலம் செலுத்தவோ வேண்டாம் என கனடா மக்களுக்கு கனடிய சுகாதாரத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ‘ஷாங்காய் ERP பெப்டைட் பயோடெக்னாலஜி’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 11,400-க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைக் கைப்பற்றி பரிசோதித்ததில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
“தூய்மையற்ற அல்லது பாக்டீரியா கலந்த மருந்துகளை ஊசி மூலம் செலுத்துவது கடுமையான தொற்றுகள், மருத்துவமனை அனுமதி மற்றும் தீவிர நிகழ்வுகளில் உயிருக்கே ஆபத்தான செப்சிஸ் நோய்க்கு வழிவகுக்கும்” என்று கனடிய சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது.


