Sunday, October 18, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடா இராணுவத்தளத்தில் வெடி விபத்து: 7 பேர் உயிரிழப்பு

கனடா இராணுவத்தளத்தில் வெடி விபத்து: 7 பேர் உயிரிழப்பு

கனடாவின் அல்பர்டா மாகாணம் வைன்ரைட் நகரில் அமைந்துள்ள இராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இராணுவ தளத்தில் இராணுவ வீரர்களுக்கு பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குறித்த இராணுவ தளத்தில் இன்று (18) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தததோடு 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தீவிர விசாரணை

குண்டு வீச்சு பயிற்சியின்போது இயற்கை எரிவாயுக்குழாய் மீது வெடிகுண்டு விழுந்ததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, இந்த வெடி விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments