Tuesday, March 10, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் இறைச்சிக் கடை பணியாளரின் நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டுகள்!

கனடாவில் இறைச்சிக் கடை பணியாளரின் நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டுகள்!

கனடாவின் பிரான்ட்போர்ட் Brantford நகரைச் சேர்ந்த இறைச்சிக்கடை தொழிலாளர் ஒருவர், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கி அனைவரினதும் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக இறைச்சி தொழிலில் பணியாற்றி வரும் சாக் பேக்கர் (Zac Baker), இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நிறுவனமொன்றில் தனது பணியைத் தொடங்கினார்.

2010 முதல் அவர் கேம்பிரிட்ஜ் விவசாய சந்தையில் வாரந்தோறும் தனது பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் நீண்டகால உறவுகளை உருவாக்கியுள்ளார்.

டிசம்பர் மாதத்தில், பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நெருங்கிய நண்பருக்காக தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முடிவு செய்தார்.

பரிசோதனைகளுக்காக டொராண்டோ பொது மருத்துவமனையில் விரிவான இரத்த பரிசோதனைகள் மற்றும் ஸ்கான்கள் மேற்கொள்ளப்பட்டன.

அவர் பொருந்தக்கூடிய தானதாரராக அடையாளம் காணப்பட்டு, மார்ச் 2ஆம் திகதி அறுவை சிகிச்சை தினமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்கு முன்பே அவரது நண்பர் உயிரிழந்தார்.

“அவர் மறைவதற்கு ஒரு வாரம் முன்பு நாங்கள் நேரம் செலவிட்டு பேசிக்கொள்ள முடிந்தது. பொருந்திய தானதாரர் கிடைத்தது குறித்து அவருடன் பகிர்ந்துகொண்டோம்,” என பேக்கர் நினைவுகூர்ந்தார்.

அனைத்து ஏற்பாடுகளும் முடிந்திருந்ததால், தனது முடிவை மாற்றாமல், பெயர் குறிப்பிடாத (anonymous) நபருக்காக கல்லீரல் தானம் செய்யத் தீர்மானித்தார்.

பெறுநர் பட்டியலில் உள்ளவர்களில் சுமார் 25% பேர் பொருந்தும் உறுப்பு கிடைக்குமுன் உயிரிழக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கனடாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தேவைக்கேற்ற உறுப்புகள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுவதாகவும் கனடா கல்லீரல் அமைப்பின் பிரதிநிதி பிரே டெலானி-ஸ்மித் தெரிவித்தார்.

இதேவேளை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வாரம் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும் என்றும், பின்னர் குறைந்தது ஐந்து முதல் ஆறு வாரங்கள் முழுமையான ஓய்வு அவசியம் என்றும் பேக்கர் கூறினார்.

“கல்லீரலின் ஒரு பகுதியுடன் வாழ முடியாது என்று நினைத்தேன். ஆனால் அது மீண்டும் முழுமையாக வளர்கிறது – அதுவும் விரைவாக,” என அவர் விளக்கினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments