Thursday, November 21, 2024
spot_img
Homeஇலங்கை செய்திகள்கணவனால் தீ வைக்கப்பட்டு காயமடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கணவனால் தீ வைக்கப்பட்டு காயமடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கணவனால் தீ வைக்கப்பட்டு காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மனைவியே உயிரிழந்துள்ளார்.

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதால் கோபமடைந்து கணவன் தனது மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

பின்னர், கோபம் தணிந்த கணவன் தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற போது தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்த கணவரும் மனைவியும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மனைவி மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த மனைவி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments