Wednesday, October 14, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஐ.சி.சியின் சிறந்த வீராங்கனை விருதை இரண்டாவது முறையாக வென்றார் ஷஃபாலி வர்மா!

ஐ.சி.சியின் சிறந்த வீராங்கனை விருதை இரண்டாவது முறையாக வென்றார் ஷஃபாலி வர்மா!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதை இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் முதல்முறையாக இந்த விருதை வென்ற ஷஃபாலி வர்மா, இம்முறை ஆசியக் கிண்ணம் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் இவ்விருதைத் தனதாக்கியுள்ளார்.

கடந்த மாதம் ஏழு ரி20 போட்டிகளில் விளையாடிய அவர், 72 என்ற சராசரியில் 360 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் இரண்டு அரைச்சதங்களும் அடங்குகின்றன. அத்துடன், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இவ்விருதை இரண்டாவது முறையாக வென்றது மிகுந்த கௌரவமளிப்பதாகத் தெரிவித்த ஷஃபாலி வர்மா, ஆசியக் கிண்ணம் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்காகச் சிறப்பாகப் பங்களித்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரி20 போட்டிகளுக்கான ஐ.சி.சி. துடுப்பாட்ட வீராங்கனைகள் தரவரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் ஷஃபாலி வர்மா முன்னேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments