Thursday, September 3, 2026
spot_img
Homeஉலக செய்திகள்எந்திரன்’ நிஜமாகிவிட்டதா? மனிதரை தாக்க முயன்ற ரோபோ!

எந்திரன்’ நிஜமாகிவிட்டதா? மனிதரை தாக்க முயன்ற ரோபோ!

ரஷ்யாவில் மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவர் தள்ளியதால் மனித உருவ சேவை ரோபோ ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மனித உருவ சேவை ரோபோவிடம், கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் கைகுலுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால், ரோபோ அதற்கு பதிலளிக்காததால் அதிருப்தியடைந்த அந்த நபர், ரோபோவை லேசாக தள்ளியுள்ளார்.

இதையடுத்து, ரோபோ திடீரென ஆக்ரோஷமாக செயல்பட்டு, அந்த வாடிக்கையாளரை கால்களால் தாக்க முயன்றதாக வீடியோவில் காணப்படுகிறது.

ரோபோவை கட்டுப்படுத்த கடையில் இருந்த இருவர் முயன்ற போதிலும், அது தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்பட்டு அவர்களையும் தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வீடியோவை பார்த்த பலரும், ரோபோவின் எதிர்பாராத ஆக்ரோஷமான நடவடிக்கையை தமிழில் வெளியான ரஜினிகாந்தின் ‘எந்திரன்’ திரைப்படம் மற்றும் ஹாலிவுட் திரைப்படமான ‘தி டெர்மினேட்டர்’ ஆகியவற்றுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மனிதர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட ரோபோவே மனிதர்களை தாக்க முயன்றதாகத் தோன்றும் காட்சிகள் இணையத்தில் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments