ஈரான் ஆதரவு பெற்ற யேமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலுக்கும் ஏடன் வளைகுடாவுக்கும் இடையிலான முக்கிய கடல்வழியான பாப் அல்-மந்தெப் நீரிணைப்பில் அமைந்துள்ள பெரிம் (Mayun) தீவை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யேமன் அரசுப் படைகள் அப்பகுதியிலிருந்து பின்வாங்கியதைத் தொடர்ந்து ஹூதிகள் தீவை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனுடன், துபாப் கடலோர நகரம் மற்றும் ஹனிஷ் தீவுகளின் சில பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளதாக Reuters தெரிவித்துள்ளது.
பாப் அல்-மந்தெப் நீரிணைப்பு உலகளாவிய கடல் வர்த்தகத்திற்கும் எரிபொருள் போக்குவரத்திற்கும் மிக முக்கியமான பாதையாக உள்ளது. இந்தப் பகுதியில் ஹூதிகளின் கட்டுப்பாடு அதிகரிப்பது சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், யேமன் அரசாங்கம் இழந்த பகுதிகளை மீட்க எதிர்த் தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தையிலும் தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


