Saturday, August 29, 2026
spot_img
Homeஉலக செய்திகள்உலகின் மிக இளம் வயது மன்னர் ஓயோ நியாம்பா தனது 34 வயதில் காலமானார்

உலகின் மிக இளம் வயது மன்னர் ஓயோ நியாம்பா தனது 34 வயதில் காலமானார்

உகாண்டா தோரோ (Tooro) இராச்சியத்தின் மன்னர் ஓயோ நியாம்பா (Oyo Nyimba) தனது 34 ஆவது வயதில் காலமானதாக அந்த நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

1995 ஆம் ஆண்டில் தனது மூன்றாம் வயதில் அரியணை ஏறியதன் மூலம், உலகின் மிக இளைய வயதுள்ள ஆளும் மன்னர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது ஓயோ நியாம்பா கபம்பா இகுரு ருகிடி உகாண்டாவின் மேற்கே கொங்கோ ஜனநாயகக் குடியரசு எல்லைக்கு அருகில் உள்ள தோரோ இராச்சியத்தின் மன்னராவார்.

கடந்த 1995 செப்டம்பர் 12 அன்று தனது தந்தை மறைந்ததைத் தொடர்ந்து அவர் தனது 3 ஆவது வயதில் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு 10:00 மணியளவில் அவர் காலமானதாகத் தோரோ இராச்சியத்தின் பிரதமர் கல்வின் ஆம்ஸ்ட்ராங் அறிவித்தார்.

எனினும் அவரது இறப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை. அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்ததாக உகாண்டாவின் அமைச்சர் ஒருவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

உகாண்டா ஒரு குடியரசாக இருந்தாலும், அங்குள்ள பாரம்பரிய இராச்சியங்கள் பெரிய அளவில் அரசியல் அதிகாரம் கொண்டிருக்கவில்லை என்றாலும், கலாசார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மகத்தான செல்வாக்கைக் கொண்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments