Friday, July 3, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கை – பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல்

இலங்கை – பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) Muhammad Ali, 6ஆவது பாகிஸ்தான்–இலங்கை ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், (02 ஜூலை) ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்திலுள்ள பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்புச் செயலாளர், அவருடன் சுமுகமான கலந்துரையாடல் ஈடுபட்டார். இதன்போது, நடைபெற்று வரும் இலங்கை–பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவப் பரிமாற்றங்கள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பரஸ்பர மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பரஸ்பர அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் பிரதிச் செயலாளர் ரியர் அட்மிரல் Amir Mahmood, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) Dr. Nayyar Naseer மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் Muhammad Farooq ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments