Thursday, August 27, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இலங்கை அணி அபாரம் - இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு!

இலங்கை அணி அபாரம் – இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு!

கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான போராட்டத்தை வெளிப்படுத்திப் போட்டியைச் சமநிலையில்  முடித்துக்கொண்டது.

 

முதல் இன்னிங்ஸில் இமாலய பின்னடைவைச் சந்தித்த போதிலும், இலங்கை வீரர்களின் விடாமுயற்சியால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

 

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 503 ஓட்டங்கள் குவித்த நிலையில் தனது இன்னிங்ஸை இடைநிறுத்தியது.

 

இந்திய அணியின் சார்பில் அபாரமாக ஆடிய தேவ்தத் படிக்கல் (117) மற்றும் துருவ் ஜூரெல் (115*) ஆகிய இருவரும் சதங்கள் அடித்து அணி இமாலய ஓட்ட எண்ணிக்கையை எட்ட உதவினர்.

 

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி 290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுச (103) சதம் அடித்து ஓரளவுக்குப் போராடிய போதிலும், அணி 213 ஓட்டங்கள் பின்தங்கியதால் இந்திய அணி இலங்கைக்கு ‘ஃபாலோ-ஆன்’ (Follow-on) வழங்கி மீண்டும் துடுப்பெடுத்தாட பணித்தது.

 

இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி, ஒரு கட்டத்தில் 218 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியின் விளிம்பில் தள்ளாடியது.

 

இருப்பினும், பொறுப்புடன் ஆடிய பசிந்து சூரியபண்டார (92) மற்றும் கமிந்து மெந்திஸ் (55) ஆகியோர் அரைசதங்கள் அடித்து அணி மீண்டெழ அடித்தளம் அமைத்தனர்.

 

கடைசி நாள் ஆட்டத்தில் மீண்டும் களத்தில் நங்கூரமாக நின்ற சொனல் தினுச, கீழ்வரிசை வீரர் கேசர நுவந்தவுடன் (46) இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 112 ஓட்டங்கள் சேர்த்துப் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

 

முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் அசத்திய சொனல் தினுச, 133 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியை ஆபத்திலிருந்து மீட்டார்.

 

ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 154 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 429 ஓட்டங்கள் எடுத்திருந்த போது போட்டி சமனில் முடித்துக்கொள்ளப்பட்டது. ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய சொனல் தினுசவின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமே இலங்கை அணி தோல்வியைத் தவிர்ப்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments