Thursday, October 15, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி

இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி

இந்தியாவுக்கு எதிரான 4வது ரி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை சமன் செய்துள்ளது.

இந்தியா சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 5 ரி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் 4வது போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை தொடர்ந்து முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களை குவித்தது.

அணி தலைவர் ஷாய் ஹோப் 50 பந்துகளில் 102 ஓட்டங்களையும் ரதர்ஃபோர்டு 26 பந்துகளில் 49 ஓட்டங்களையும் குவித்தனர்.

இதையடுத்து 248 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பான தொடக்கம் தந்து அரை சதம் விளாசினார். எனினும் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் இந்திய அணி தடுமாறியது.

இறுதியில் இந்திய அணி 223 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகளின் கீமோ பால் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் தொடரை சமன் செய்துள்ளது.

இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டி பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments