இந்தியா – இலங்கை கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் 16 ஆராய்ச்சிகள் மற்றும் 22 செயலமர்வுகளுக்கான ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை – இந்திய கூட்டு ஆராய்ச்சி மற்றும் செயலமர்வுத் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டு சுழற்சியின் கீழ், 16 ஆராய்ச்சிகள் மற்றும் 22 செயலமர்வுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வு அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மேம்பட்ட சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த இருதரப்பு ஒத்துழைப்புத் திட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கியமான இராஜதந்திர மைல்கல்லாகும்.
2008 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது 5-வது கட்டத்தை எட்டியுள்ளது. வெறும் கல்விசார் வெளியீடுகளுக்கு அப்பால், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சமூக சவால்களுக்குத் தீர்வுகாணும் வணிக ரீதியான கண்டுபிடிப்புகள் மற்றும் நடைமுறைத் தாக்கங்களுக்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது


