Wednesday, November 18, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஆம்புலன்ஸை மறித்து நடனமாடிய இளைஞர்கள்

ஆம்புலன்ஸை மறித்து நடனமாடிய இளைஞர்கள்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடாமல் சாலையை மறித்து கார்களின் கூரையில் ஏறி இளைஞர்கள் நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டம், பாபுகர் பகுதியிலுள்ள பச்ரவுதா கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு சொகுசு கார்களில் வந்த இளைஞர்கள் குழுவினர், சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட மறுப்பு!

இதன்போது, கார்களின் கூரையில் ஏறிய இளைஞர்கள் பாடல்களைப் பாடியபடியும் நடனமாடியபடியும் இருந்துள்ளனர்.

அந்த நேரத்தில், அவ்வழியாக இரண்டு ஆம்புலன்ஸ்கள் சைரன் ஒலியுடன் வந்துள்ளன. எனினும், இளைஞர்கள் வாகனங்களை அகற்றி ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடாமல் தொடர்ந்து நடனமாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், இரண்டு ஆம்புலன்ஸ்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றில் ஒரு ஆம்புலன்ஸில் நோயாளி ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் கண்டனம்!

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணொளியைப் பார்வையிட்ட பலரும், அவசர மருத்துவ சேவைகளுக்குக் கூட வழிவிடாமல் இளைஞர்கள் நடந்துகொண்ட விதத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments