Sunday, September 27, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆடவர் ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான காலிறுதி சுற்று அட்டவணை வெளியீடு

ஆடவர் ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான காலிறுதி சுற்று அட்டவணை வெளியீடு

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான காலிறுதி சுற்று அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணி தனது காலிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

செப்டம்பர் 28ஆம் திகதி இலங்கை நேரப்படி காலை 5:30 மணிக்குத் தொடங்கும் முதல் காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

அதனைத் தொடர்ந்து, அதே நாளில் காலை 10:00 மணிக்கு நடைபெறும் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 29 ஆம் திகதி நடைபெறும் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் இலங்கை – நேபாள அணிகள் இலங்கை நேரப்படி காலை 5:30 மணிக்கும், கடைசி காலிறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் – மலேசியா அணிகள் காலை 10:00 மணிக்கும் களமிறங்குகின்றன.

லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்ற அதே மைதானத்திலேயே காலிறுதி ஆட்டங்களும் நடைபெறவுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments