Thursday, September 3, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை

அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை

இன்று முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு நேர் மேலே சூரியன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (03) நண்பகல் 12.09 மணிக்கு மாதம்பே, தோரயாய, தொட்டகமுவ, ரத்தோட்ட மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments