Thursday, March 12, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மெக்சிகோவில் தொடருந்து விபத்து!

மெக்சிகோவில் தொடருந்து விபத்து!

மெக்சிகோவின் ஓக்ஸாக்கா (Oaxaca) பிராந்தியத்தில் மிக மோசமான தொடருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

பசிபிக் மற்றும் வளைகுடா பகுதிகளை இணைக்கும் இந்தத் தொடருந்து தடம் புரண்டதில், குறைந்தது 13 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்புப் பணிகள் மற்றும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தஇண்டர் ஓசியானிக் (Inter oceanic) தொடருந்து திட்டம், நாட்டின் மிக முக்கியமான வர்த்தக வழித்தடமாக கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க மெக்சிகோ அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments