My Blog

அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் மார்க்கோ ருபியோ?

அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளராக மார்க்கோ ருபியோ நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் இதனை சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர்.

புளோரிடாவை சேர்ந்த குடியரசுக்கட்சியின் செனெட்டர் உயர் பதவி குறித்து டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க செனெட்டின் புலனாய்வு குழு உறுப்பினராக உள்ள ருபியோ வெளிவிவகார உறவுகுழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் ஒரு மூத்த பாத்திரத்திற்காக மார்கோ ரூபியோ பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது-இந்த ஜோடி முதன்முதலில் தேசிய அரசியல் அரங்கில் நுழைந்தபோது இது நினைத்துப்பாக்க முடியாத விடயமாக காணப்பட்டது.

2016 முதல் ருபியோ என்ற நட்சத்திரம் உயர்ந்துகொண்டே வந்தார்40வயதுகளில் காணப்பட்ட அவர் 2010 முதல் செனெட் உறுப்பினராக பதவி வகித்தார் கியுபாவை சேர்ந்த தொழிலாளர் வர்க்க குடியேற்றவாசிகளின் பிள்ளை என்பது அவரை ஏனையவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டியது.

அவரது சுயவிபரம் அவ்வளவு சிறப்பானதாக காணப்பட்டதால் 2016 இல் தான் போட்டியிடுவேன் என அறிவித்தபோது அவருக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து நிலவியது.

எனினும் டிரம்பின் வருகை அவரது அரசியல் அபிலாசைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

2016 இல் குடியரசுகட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டி இடம்பெற்றவேளை ருபியோ டிரம்பினை கடுமையாக விமர்சித்தார் இருவரும் ஒருவரையொருவர் தனிப்பட்டரீதியில் விமர்சித்தனர்.

ட்ரம்ப் பகிரங்கமாக ரூபியோவை “சிறிய மார்கோ” என்று அழைத்தார் அதே நேரத்தில் ரூபியோ டிரம்ப்பின் “சிறிய கைகள்” பற்றி கூர்மையான கருத்துக்களை வெளியிட்டார்.

எவ்வாறாயினும் அந்த தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து குடியரசுக் கட்சி டிரம்ப்பின் பிடியில் உறுதியாக இருப்பதால் ரூபியோ எதிர்ப்பாளரிடமிருந்து ஆதரவாளராகமாறிவிட்டார்.

ட்ரம்ப் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அவர்கள் பகிரங்கமாக சமரசம் செய்து கொண்டனர் மேலும் இந்த பிரச்சாரத்தின் போது இந்த ஜோடி ஒரு மேடையை பகிர்ந்து கொண்டது.

இப்போது 53 வயதான ரூபியோ அமெரிக்க அரசாங்கத்தின் மிக மூத்த பதவிகளில் ஒன்றான டிரம்ப்பின் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்படலாம்.

Exit mobile version